புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 7 ஜூன் 2019 (13:22 IST)

”தளபதி 64” திரைப்படத்தின் கதாநாயகி இந்த ”நடிகை” தானா???

பிரபல நடிகர் விஜயின் ”தளபதி 64” திரைப்படத்தை “மாநகரம்” திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என செய்தி வெளியானதை தொடர்ந்து தற்போது “தளபதி 64”-ல் நடிக்கவிருக்கும் கதாநாயகியை குறித்து தகவல் வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
இத்திரைப்படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை சமந்தா நடிக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. இது கிட்டதட்ட அதிகாரப்பூர்வமான ஒன்று எனவும் செய்திகள் வெளிவருகின்றன.

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல மொழிகளில்  நடித்துள்ளார். மேலும் விஜய்-சமந்தா இருவரும் ஏற்கனவே இணைந்து நடித்த “கத்தி” திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.