திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (18:51 IST)

சிம்பு படத்தில் அறிமுகம்...11 ஆண்டுகள் நிறைவு...சமந்தா நன்றி கூறி வீடியோ ரிலீஸ்

சினிமாவில் நடிகை சமந்தா அறிமுகமாகி 11 ஆண்டுகள் ஆனதையொட்டி அவருக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் கெளதம் மேனன். இவர் காக்க காக்க,வாரணம் ஆயிரம்,பச்சைக்கிளி முத்துச்சரம் , விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை நோக்கிப் பாயும் தோட்டா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது அவர்  இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள,நதிகளே நீராடும் சூரியன் என்ற படத்தின் வேலைகளை விரைவில் துவங்கவுள்ளது.

இந்நிலையில் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படம் வெளியாகி இன்றுடன்( 2010-பிப் -26)  11 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி இப்படத்தில் அறிமுகமான சமந்தா கெளதமுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கெளதமுக்கு நன்றி தெரிவித்து நன்றி தெரிவித்து, ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார் இதுவைரலாகி வருகிறது.

சினிமாவில் நடிகை சமந்தா அறிமுகமாகி 11 ஆண்டுகள் ஆனதையொட்டி அவருக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
Introduction in Simbu movie..11 years introduction..Santa thanks video release