திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 15 ஜனவரி 2018 (18:51 IST)

உலகின் மிகவும் ஹேண்ட்சமான நடிகர் பட்டத்தைப் பெற்ற இந்திய நடிகர்

பன்னாடுகளை சேர்ந்த ஒரு சர்வே நிறுவனம் 2018-ம் ஆண்டுக்கான ஹேண்ட்சம் நடிகர் யார்? என்பதை அறிய நடத்திய கருத்துக்கணிப்பில்  பாலிவுட் நாயகன் ஹிரித்திக் ரோஷன் முதல் நபராக தேர்வாகியுள்ளார்.
ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பாட்டின்சன், தைவான் நடிகர் காட்பிரே காவ், கிறிஸ் இவான்ஸ், டேவிட் போரியனஸ், கனடா நடிகர் நோவா மில்ஸ், ஹென்றி காவில், டாம் ஹிடில்ஸ்டன் மற்றும் சாம் ஹேவ்கான் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி இந்த இடத்துக்கு ஹிரித்திக் ரோஷன் தேர்வாகியுள்ளார். ஹிரித்திக்குக்கு உலகின் மிகவும் ஹேண்ட்சமான நடிகர்  அளிக்கப்பட்டது தொடர்பாக அந்த சர்வே நிறுவனம் தெரிவித்துள்ள விபரத்தின்படி, உயரமாகவும், கவர்ச்சிகரமாகவும் உள்ள ஹிரித்திக் ரோஷன், திரையுலகில் நுழைந்த காலத்தில் இருந்தே பல சாதனைகளை படைத்துள்ளார். கவர்ச்சிகரமான கண்களும், திடகாத்திரமான உடல்கட்டும் அவருடைய தோற்றத்துக்கு மேலும் அழகூட்டுகிறது.
நடிகரின் தோற்றம், பாக்ஸ் ஆபிஸ் சேகரிப்புகள், உலகளாவிய ரசிகர்கள் மற்றும் பிராண்டு ஒப்புதல்கள் ஆகியவைக் கொண்டு இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என  பன்னாட்டு சர்வே நிறுவனம் தெரிவித்தது . முன்பு ஹிருத்திக் ரோஷன் ஆசியாவின் கவர்ச்சிகரமான  நாயகன் உள்ளிட்ட பல பட்டங்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது.