1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 25 அக்டோபர் 2017 (16:44 IST)

நடிகை அசின் குழந்தையுடன் பாலிவுட் நடிகர் அக்‌ஷை குமார்

அசினுக்கும், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான ராகுல் சர்மாவுக்கும் கடந்த ஆண்டு ஜனவரியில் திருமணம்  நடைபெற்றது. இந்நிலையில், நேற்று இரவு நடிகை அசின் பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

 
மலையாள நடிகையான அசின், ‘எம் குமரன் சன் ஆஃப் மஹாலட்சுமி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மலையாளம், தெலுங்கு, ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ள அசின், நிறைய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். ‘கஜினி’ படத்தின்  மூலம் ஹிந்திக்குப் போன அசின், அங்கேயே செட்டிலாகிவிட்டார்.
 
தமிழில் விஜய்யுடன் சிவகாசி, போக்கிரி, அஜீத்துடன் வரலாறு, உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், சூர்யாவுடன் நடித்த கஜினி  படத்தின் இந்தி ரீமேக் படத்திலும் நடித்து இந்தி திரை உலகிலும் பிரபலமானார். இன்று காலை அவர்களுக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது. அதை காண நடிகை அசினின் நண்பர் அக்‌ஷை குமார் வந்துள்ளார். அவரது குழந்தையை கையில்  வைத்தபடி ஒரு புகைப்படத்தை அக்‌ஷை குமார் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி  வருகிறது.