வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 நவம்பர் 2021 (10:23 IST)

இமான் அண்ணாச்சிக்கு கிடைத்த கேப்டன் பதவி: ஆனால் திடீரென ஏற்பட்ட திருப்பம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று கேப்டன் பதவிக்கான டாஸ்க் நடந்த நிலையில் இமான் அண்ணாச்சி கேப்டன் பதவிக்கான டாஸ்க்கில் வென்று கேப்டன் ஆனார். ஆனால் அதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது 
 
இன்றைய முதல் புரமோ வீடியோ வெளியாகியுள்ள நிலையில் கேப்டன் பதவிக்கு இமான் அண்ணாச்சி, சிபி மற்றும் அபிஷேக் கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில் கேப்டன் டாஸ்க்கில் இமான் அண்ணாச்சி வெற்றிபெற்ற நிலையில் திடீரென தன்னிடமுள்ள காயினை வைத்து கேப்டன் பதவியை தனக்கு மாற்றிக் கொள்வதாக நிரூப் அறிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து இந்த வார கேப்டனாக நிரூப் பொறுப்பு ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நிரூப் மற்றவர்களிடம் அராஜகம் செய்து வருவதாக கூறப்படும் நிலையில் அவரது கேப்டன்ஷிப்பில் பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்