1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 24 நவம்பர் 2021 (08:45 IST)

மருத்துவமனையில் இருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சி: கமல்ஹாசனின் மெகா திட்டம்!

விஜய் டிவியில் 50 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் இந்த நிலையில் திடீரென அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதில் வேறு யாரேனும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்றும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி மருத்துவமனையிலிருந்து டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு சில வாரங்களுக்கு கமல்ஹாசன் தொகுத்து வழங்க முடிவு செய்திருப்பதாகவும் இதனை அடுத்து மருத்துவமனை நிர்வாகத்திடம் விஜய் டிவி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டால் பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்னும் ஒரு சில வாரங்களுக்கு மருத்துவமனையிலிருந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் வேறு சில நபர்களிடமும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிகிறது.