வேட்டையாடும் "பேட்டை"யோடு நான் மோத தயாராயில்லை - நாஞ்சில் சம்பத்..!
"பேட்ட , விஸ்வாசம்" என இரு துருவங்கள் மோதும் போது நடுவில் நான் நுழைந்து சிக்கிக்கொள்ள விரும்பவில்லை - நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேட்டி.
ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்கள் பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் திரைக்கு வருவதால் ரஜினி மற்றும் அஜித்தின் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
நாஞ்சில் சம்பத் அரசியலில் இருந்து ஒதுங்கி சினிமாவில் நடிக்கிறார். காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அரசியலை கிண்டலடிக்கும் எல்.கே.ஜி படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.
இந்நிலையில் தற்போது இந்த இரண்டு படங்களை குறித்து நாஞ்சில் சம்பத் பேட்டி ஒன்றில் கூறியதாவது ,
பேட்ட
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து நிச்சயம் பேட்ட படத்தை வெற்றி அடையச் செய்வார்கள். மேலும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இருப்பதால் அவரின் ரசிகர்களும் சேர்ந்து பேட்டையை வேட்டையாட செய்வார்கள்.
விஸ்வாசம்
அதே போல் தம்பி அஜித் அவர்களின் விஸ்வாசத்தையும் அவரின் ரசிகர்கள் விஸ்வாசத்தோடு நேசிப்பார்கள் . ஏனென்றால் அஜித்திற்காக தலைகொடுக்கும் ரசிகர்கள் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன் ஆதலால் நிச்சயம் எந்த இடையூறும் இன்றி விஸ்வாசம் நிச்சயம் வெற்றிபெறும் என நம்புகிறேன்.
"எல்.கே.ஜி" பின்வாங்கியதன் பின்னணி
இந்த பொங்கலுக்கு ஆர்.ஜே பாலாஜியும் நானும் நடித்துள்ள "எல்.கே.ஜி" படத்தை வெளியிடலாம் என்று திட்டமிட்டோம் ஆனால் இரண்டு சிங்கங்கள் மோதும்போது இடையில் நங்கள் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை ஆதலால் பாஜியிடம் இந்த பொங்கலுக்கு வேண்டாம் என கூறினேன் என்று தெரிவித்துள்ளார் நாஞ்சில் சம்பத்.