செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 8 ஜனவரி 2019 (17:26 IST)

பேட்ட படத்துக்கா இந்த நிலை..? 10% தியேட்டர் கூட கிடைக்கல... அவசரபட்ட சன் பிக்சர்ஸ்

இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேட்ட. 
 
இந்த படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி எளியாகிறது. இதே தினத்தி விஸ்வாசம் படமும் வெளியாக உள்ளதால் தமிழகத்தி தியேட்டர்கள் சரிசமமாக பிரித்து இரு படங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 
 
ஆனால், தெலுங்கில் பேட்ட படத்திற்கு 10 சதவீத தியேட்டர் கூட கிடைக்காமல் திணறிவருகிறது. ஆம், பொங்கலை முன்னிட்டு அங்கு பாலகிருஷ்ணா நடிக்கும் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் நடிக்கும் வினய விதேய ராமா ஆகிய படங்கள் வெளியாகின்றன. 
 
இந்த இரு படங்களுமே பெரிய ஹிரோக்களின் படங்கள் என்பதால் 90 சதவீத தியேட்டர்களை இவ்விரு படங்களுமே கைப்பற்றிவிட்டன. முதலில் பேட்டை படத்தை தெலுங்கில் ஜனவரி 26 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டனர். 
ஆனால், சன் பிக்சர்ஸ் பேட்ட படம் ஒரே நாளில் அனைத்து மொழிகளிலும் வெளியீடு என்று அறிவித்ததால் இந்த திணறல் ஏற்பட்டுள்ளது. ஆனால் விஸ்வாசம் தெலுங்கில் படம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிறது.
 
தெலுங்கில் ரஜினி படங்களில் மிக குறைவான தியேட்டர்களில் வெளியான படம் என்ற பெயரை பேட்ட எடுக்கும் என தெரிகிறது. இந்த விஷயத்தில் சன் பிக்சர்ஸ் கோட்டைவிட்டுவிட்டது.