ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 8 ஜனவரி 2019 (08:05 IST)

நடிக்க வந்திருக்கேன்: எவன் கூடயும் சண்டபோட வரல; ரஜினியை தாக்கினாரா அஜித்?

நடிக்க வந்திருக்கிறேன் எனவும் யார் கூடயும் சண்டை போட வரவில்லை எனவும் அஜித் அவ்வப்போது கூறுவார் என இயக்குநர் சிவா கூறியுள்ளார்.
பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரு படங்களும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. எனவே இந்த பொங்கல் ரஜினி ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் சர்க்கரை பொங்கல்தான். ரஜினி படமும் அஜித் படமும் நேரடியாக மோதுவது இதுவே முதல்முறை. 
 
பேட்ட படத்த்தின் டிரைலர் கடந்த 28 ஆம் தேதி வெளியானது. அதில் ரஜினி பேசிய சில வசனங்கள் அஜித்தின் விஸ்வாசம் படத்தை தாக்கி பேசியதாக அஜித்தின் ரசிகர்கள் கொதித்தெழுந்தனர்.
 
இதனையடுத்து  டிசம்பர் 30 ஆம் தேதி வந்தது விஸ்வாசம் டிரைலர். டிரைலரில் அஜித் பேசிய சில வசன்ங்கள் பேட்ட டிரைலரில் ரஜினிப் பேசிய வசனங்களுக்குக் கௌண்ட்டராக அமைந்ததால் டிரைலர் வைரல் ஆனது. அதுமட்டுமில்லாமல் ரஜினியின் பேட்ட டிரைலர் சாதனையை விஸ்வாசம் டிரைலரின் சாதனை ஈசியாக முறியடித்தது. சமூகவலைதளங்களில் அஜித் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய விஸ்வாசம் பட இயக்குனர் சிவா, அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் இயக்கிவிட்டேன், விஸ்வாசம் 4வது படம். அஜித்தைப்போல சிறந்த மனிதரை நான் பார்த்ததில்லை. அவரை பற்றி பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம். அஜித் எப்பொழுதும் அவரின் ரசிகர்களை பற்றி பேசுவார்.
 
மேலும் தான் சினிமாவில் வேலை பார்க்க தான் வந்திருக்கிறேன் எனவும் யாருடனும் சண்டை போட வரவில்லை எனவும் அஜித் என்னிடம் அவ்வப்போது கூறுவார் என சிவா கூறினார்.
 
இதனைக் கேட்ட பலர், அஜித் ரஜினியை தான் இப்படி மறைமுகமாக தாக்கி பேசியிருக்கிறார் என சொல்லி வருகின்றனர். உண்மையில் அஜித்திற்கு ரஜினி மீது தனி மரியாதை இருக்கிறது. யாரையும் தாக்கி பேச வேண்டும் என்ற எண்ணமோ, யாரையும் பழி வாங்கவேண்டும் என்ற நோக்கமோ அவருக்கு துளியளவும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.