புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 8 ஜனவரி 2019 (14:51 IST)

தலைவராவது, தலயாவது; மிரட்டும் தமிழ்ராக்கர்ஸ்: எச்சரித்த நீதிமன்றம்

திரைத்துறையினருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாய் இருக்கும் தமிழ்ராக்கர்ஸ் பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரு படங்களை வெளியிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரு படங்களும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. எனவே இந்த பொங்கல் ரஜினி ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் சர்க்கரை பொங்கல்தான். ரஜினி படமும் அஜித் படமும் நேரடியாக மோதுவது இதுவே முதல்முறை. 

























நீண்ட காலமாக திரையுலகிற்கு அச்சுறுத்தலாய் இருக்கும் தமிழ்ராக்கர்ஸ் இந்த இரு படங்களையும் குறிவைத்துள்ளன. சர்கார், 2.0, மாரி 2 உள்ளிட்ட பல படங்களை வெளியிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும் தமிழ்ராக்கர்ஸ் இந்த படங்களை இணையத்தில் வெளியிட்டது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அது என்னவென்றால் பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரு படங்களை சட்டவிரோதமாக கேபிள் டிவியிலோ, அல்லது இணையத்திலோ வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. இதற்கெல்லாம் பயப்படுகிற ஆள் தமிழ்ராக்கரஸ் இல்லை என்றாலும் நிலவரம் என்னவென்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.