வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 18 ஜூன் 2019 (12:01 IST)

நான் அப்பவே அடல்ட் படத்தை பார்த்திருக்கேன்! ஓப்பனாக சொன்ன பிரியா பவானி ஷங்கர்!

பொதுவாக பாலிவுட் நடிகர் நடிகைகள் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது தொகுப்பாளர் கேட்கும் சர்ச்சையான கேள்விகளுக்கு கூச்சமேயில்லாமல் பட்டென்று பதிலளித்து சர்ச்சைகளில் சிக்குவார்கள். அதே ஃபார்முலாவை தற்போது தமிழ் சினிமாக்களிலும் பின்தொடர்கின்றனர்.  
 
அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியா பவானி சங்கரிடம் எடக்குமுடக்கான கேள்வி ஒன்றை தொகுப்பாளர் கேட்க, அதற்கு பிரியா பவானி சங்கரும் கொஞ்சம் கூட யோசிக்கலாமல் சடாலென்று பதிலளித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார். 
 

 
பிரபல ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரியாவிடம் ‘எந்த வயதில் அந்த மாதிரி படம் பார்த்தீர்கள்?’ என்று ஆர்ஜே கேள்வி கேட்க, அதற்கு பதிலளித்த பிரியா பவானி சங்கர் ‘ ‘நான் 18 வயதில் காலேஜ் ஹாஸ்டலில் பார்த்தேன் .அப்போது சீனியர் அக்கா ஒருவர் உனக்கு 18 வயது ஆகிறது ஆதலால் இதெல்லாம் பார்க்கலாம் என்று கூறி பார்க்கவைத்தார் என்று கூறிய பிரியாவின் இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.