செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 6 ஜனவரி 2023 (15:25 IST)

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நண்பர் வி.எம், சுதாகர் மறைவு !

rajinikanth
நடிகர் ரஜினியின் நண்பர் விம்.எம். சுதாகர்  உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு சூப்பர் ஸ்டார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் திரைப்படக் கல்லூரியில் பயின்றபோது. அவருடன் படித்தவர் வி.எம்.சுதாகர்.

இவர், ஆர்.சி. சக்தி இயக்கிய ராஜாங்கம் என்ற படத்தில் வில்லனாக  நடித்துப் புகழ்பெற்றாலும் அவரிடமே தொடர்ந்து உதவி இயக்கராகப் பணியாற்றினார்.

அதன்பின்னர், ரஜினி ரசிகர் மன்றத்தின் நிர்வாகியாகவும், கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் அவரிடம் கொடுத்திருந்தார்.  

இந்த நிலையில், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி.எம்.சுதாகர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரது மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி தன் டுவிட்டர் பக்கத்தில்,’’ என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்’’ என்று பதிவிட்டுள்ளார்.