வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (18:41 IST)

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் ஹிந்திப்படம்...

கபாலி, காலா ஆகிய இரண்டு படங்களை சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கியவர் இயக்குநர் பா.ரஞ்சித். இவ்விரண்டு படங்களிலும் தனக்கென்று தனி முத்திரை பதித்தார். இந்நிலையில் பா.ரஞ்சித் அடுத்து ஒரு ஹிந்தி படம் இயக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்தப் படம் சுதந்திரப்போராட்ட தியாகியும் பழங்குடியினருமாகிய பிர்சா முண்டாவின் வாழ்கையை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
மேலும் இப்படத்தை பியாண் தி கிலௌவ்ட்ஸ் என்ற படத்தை தயாரித்த நமா பிக்சர்ஸ் நிறுவனமே இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தெரிகிறது.இந்நிலையில் பா,.ரஞ்சித்தின் ரசிகர்கள் இவரது படம் எப்போது வரும் என  ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.