திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 8 ஏப்ரல் 2018 (15:56 IST)

போராட்டத்தில் நடிகைகள் அப்செண்ட்: காரணம் என்ன?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் சினிமாத்துறையினர் சார்பில் இன்று அறவழி போராட்டம் நடைபெற்றது. 
இந்த போராட்டத்தில், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி உள்ளிட்ட சினிமா அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
 
ரஜினி, கமல், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், கார்த்தி, விஷால், சத்தியராஜ், இளையராஜா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். ஆனாலும் பல நடிகர்கள் கலந்துக்கோள்ளவில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது.  
 
இது ஒருபுறம் இருக்க, இந்த போராட்டத்தில் நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை. தன்ஷிகா, கஸ்தூரி, ரித்விகா என சில இளம் நடிகைகளும், ஸ்ரீபிரியா, ரேகா, சத்யப்பிரியா உள்ளிட்ட மூத்த நடிகைகள் சிலருமே கலந்து கொண்டனர்.
 
கடந்த ஒரு மாதமாத படப்பிடிப்பு கூட இல்லாத நிலையில், நடிகைகள் போராட்டத்தில் கலந்து கொள்ளாதது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.