1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (14:55 IST)

ஆர்.ஆர்.ஆர் பட தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ இவர்தான்!

power star
ராஜமெளலி இயக்கத்தில், ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர்.

இப்படமும் பாகுபலி சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளது.

இப்படத்தை  டிவிவி என்ற  நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் பிரமாண்ட படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டாரும்,   ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் நடிப்பில் ஒரு புதிய படத்தை  இதே  நிறுவனம் தயாரிக்கிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது,

இப்படத்தை சுஜீத் இயக்கவுள்ளார். டிவிவி நிறுவனம் சார்பில் தனயாவும்  ரவி கே சந்திரனும் தயாரிக்கவுள்ளனர்.

 
Edited by Sinoj