வெள்ளி, 31 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified வியாழன், 9 டிசம்பர் 2021 (17:37 IST)

ஆர்.ஆர்.ஆர் பட ஹீரோவை புகழ்ந்த சமந்தா

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஹீரோவையம் டிரைலரையும் பாராட்டியுள்ளார் நடிகை சமந்தா.
 
பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’.
 
இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த 3ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த ட்ரெய்லர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது.
 
இதில் ராம்சரண் “ராம்” என்ற போலீஸ் அதிகாரியாகவும், ஜூனியர் என்.டி.ஆர் கோமரம் பீம் என்ற கோண்டு இன மக்களின் நாயகனாகவும் நடித்துள்ளார். மேலும் ஆல்யா பட், அஜய்தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர்  இன்று   வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தேவரகொண்டா  முதற்கொண்டு பல நடிகர்களும் இயக்குனர்களும் இப்படத்தின் டிரைலரை பாராட்டி வருகின்றனர். 
 
இந்த டிரைலரில், நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஒரு வுழியின் முன்பு ஆக்கிரோஷமாக  இருப்பது போன்ற வீடியோ குறித்து, நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில், இது னுரு சதவீதம் உண்மை. இதில் எந்த சந்தேகமும் இல்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் உங்கள் கண்களில் ஒரு தீப்பொறி உள்ளது என தெரிவித்து, ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.