புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (17:25 IST)

ரசிகர்களால் கிடைத்த கைத்தட்டல்களை மறந்துவிட வேண்டாம்: சூர்யாவுக்கு ஹரி அறிவுரை

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ள சூரரை போற்று’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. சூர்யாவின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சூர்யாவின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது
 
இந்த நிலையில் சூர்யாவை வைத்து ஆறு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி தற்போது இது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்து உள்ளார். அவர் இது குறித்து தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
உங்களுடன் சேர்ந்து தொடர்ந்து வேலை செய்த உரிமையில் சில விஷயங்கள். ஒரு ரசிகனாக உங்கள் படத்தை தியேட்டரில் பார்ப்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி, ஓடிடியில் அல்ல. நாம் சேர்ந்து செய்த படங்களுக்கு தியேட்டரில் ரசிகர்களால் கிடைத்த கைதட்டல்களால் தான் நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதை மறந்துவிட வேண்டாம். சினிமா என்னும் தொழில் நமக்கு தெய்வம். தெய்வம் எங்கு வேண்டுமென்றாலும் இருக்கலாம், ஆனால் தியேட்டர் என்கிற கோவிலில் இருந்தால்தான் மரியாதை. படைப்பாளிகளின் கற்பனைக்கும் உழைப்புக்கும் ஒரு அங்கீகாரம்
 
தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவன் நான். இருப்பினும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தால் சினிமா இருக்கும் வரை உங்கள் பெயரும் புகழும் நிலைத்து நிற்கும்’
 
ஏற்கனவே சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாக இருந்த ’அருவா’ என்ற திரைப்படம் டிராப் ஆகி விட்டது என்பதும் இதனால் இருவருக்கும் மனஸ்தாபம் இருப்பதாகவும் அவர்கள் கூறப்படுகிறது