1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (16:41 IST)

ஓடிடியில் திரைப்படம் வெளியாவதை தடுக்க சட்டம் உண்டா? - அமைச்சர் பதில்

நடிகர் சூர்யா நடித்து, சுதா கொங்கரா இயக்கத்தில் தயாரான ‘சூரரை போற்று’ திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியிடப்படுவதாக நடிகர் சூர்யா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் மேலும் சில பெரிய ஹீரோ படங்களும் ஓடிடிக்கு விற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் திரையரங்குகள் விரைவில் திறக்கப்பட்டால் மட்டுமே பெரிய படங்கள் நழுவுவதை நிறுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் திரையரங்குகளை திறப்பது குறித்து பேசியுள்ள அமைச்சர் கடம்பூர் ராஜூ செப்டம்பர் 1ம் தேதி மத்திய அரசு திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாகவும், அதை தொடர்ந்து தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது மற்றும் அதற்கான விதிமுறைகள் வெளியிட வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளார்.

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்பட அமேசான் பிரைம்மில் வெளியாகவுள்ளதாக ஒரு போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் குழப்பி வருகிறது. ஏற்கனவே மாஸ்டர் படக்குழு தியேட்டரில்தான் வெளியாகு என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஓடிடியில் படம் வெளியாவதற்கு திரைப்பட விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளமர்.

இந்நிலையில், ஓடிடியில் திரைப்படம் வெளியாவதைத்  தடுக்கச் சட்டம் உள்ளதா என்பது குறித்து  தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளதாவது;

ஓடிடியில் திரைப்படம் வெளியாவதை தடுக்க சட்டம் கிடையாது; சினிமா துறையினர்  கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும்  எனத் தெரிவித்துள்ளார்.