புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (20:33 IST)

சூர்யாவுக்கு ஷாக் கொடுக்க மத்திய, மாநில அரசு முடிவா?

சூர்யாவுக்கு ஷாக் கொடுக்க மத்திய, மாநில அரசு முடிவா?
லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் வேறு வழியின்றி தனது சூரரைப்போற்று திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய சூர்யா முடிவு செய்தார். ஆனால் அதே நேரத்தில் இந்த திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி தான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிட்டதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தற்போது திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியுள்ள மத்திய அரசு விரைவில் திரையரங்குகள் திறக்கவும் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக நவம்பர் ஒன்றாம் தேதி முதல் திரையரங்குகளில் திறக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றது 
 
அக்டோபர் 30-ஆம் தேதி சூரரை போற்று திரைப்படம் ரிலீஸ் ஆகும் நிலையில் அதற்கு மறுநாளே திரையரங்குகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு சூர்யாவுக்கு மத்திய மாநில அரசுகள் ஷாக் கொடுத்த முடிவு செய்துள்ளதாக கோலிவுட்டில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது