புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : சனி, 4 செப்டம்பர் 2021 (20:53 IST)

ஹர்பஜன் சிங்-ன் ‘’பிரண்ட்ஷிப்’’ படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ட்ஷிப் படம் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.  

முதன்முறையாக பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். "பிரண்ட்ஷிப்" என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இருவரையும் இணைந்து இயக்கியுள்ளார்.

ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா கதா நாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் ஹீரோவாக பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்க காமெடி நடிகராக சதீஷ் நடித்துள்ளார்.

இப்படத்தின் ஹர்பஜன் சிங்கிற்கு நடிகர் சிம்பு குரல் கொடுதிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரண்ட்ஷிப் படம் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலிஸாக உள்ளது.  இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.