1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 2 செப்டம்பர் 2021 (12:15 IST)

ஹர்பஜன் சிங்கிற்கு குரல் கொடுத்த சிம்பு!

முதன்முறையாக பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். "பிரண்ட்ஷிப்" என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இருவரையும் இணைந்து இயக்கியுள்ள.
 
ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா கதா நாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் ஹீரோவாக பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்க காமெடி நடிகராக சதீஷ் நடித்துள்ளார். 
 
கல்லூரி நண்பர்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் மொத்தம் 5 நண்பர்கள் அதில் லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங் கதாபாத்திரம் இந்த சமூகத்தின் ஆண், பெண் நண்பர்கள் குறித்த பார்வையை மாற்றி அமைந்திடும் என கூறுகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு நடிகர் சிம்பு குரல் கொடுத்திருப்பதாக சூப்பரான தகவல் ஒன்று கசிந்து படத்தின் மீதான பார்வையை மாற்றியுள்ளது.