திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 16 டிசம்பர் 2019 (22:15 IST)

சந்தானம் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சிஎஸ்கே வீரர்

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரபல வீரருமான ஹர்பஜன் சிங் ஒரு தமிழ் படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் அந்த  படத்தின் தகவல் குறித்து ஹர்பஜன் சிங் சமீபத்தில் தமிழில் டுவீட் செய்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். அதில் அவர் கூறியதாவது: என்னை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யும் @kjr_studios,#dikkiloona @SoldiersFactory,@iamsanthanam குழுவுக்கு நன்றி.#தலைவர் #தல #தளபதி உருவாகிய பூமி.#தமிழ் வார்த்தைகளால் வார்த்திட்ட என்னை தூக்கி நிறுத்திய உறவுகளே.உங்களால் வெள்ளித்திரையில்.இந்த  வளர்ச்சிக்கு காரணம் சரவணன் பாண்டியன்’ என்று டுவீட் செய்திருந்தார்.
 
எனவே சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தில் தான் ஹர்பஜன்சிங் நடிக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புக்காக ஹர்பஜன்சிங் சென்னை வந்துள்ளார். சந்தானம் மற்றும் படக்குழுவினருடன் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு வாரம் சென்னையில் தங்கியிருந்து அவர் படப்பிடிப்பில் ஈடுபடுவார் என்றும் அதன் பின்னரே அவர் தனது சொந்த ஊருக்கு திரும்புவார் என்றும் அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
 
சந்தானம் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தை கார்த்திக் யோகி என்பவர் இயக்குகிறார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது