ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 15 செப்டம்பர் 2021 (06:36 IST)

HBD இயக்குனர் பி.வாசு!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பி வாசு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் அவருக்கு திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி மலையாளம் ஆகிய படங்களில் பணிபுரிந்து உள்ள பி வாசு தமிழில் ’என் தங்கச்சி படிச்சவ’ என்ற திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார்; இந்த படம் மிகப் பெரிய ஹிட்டான நிலையில் அதன் பின்னர் பணக்காரன், சின்னதம்பி, மன்னன், வால்டர் வெற்றிவேல், உழைப்பாளி, மிஸ்டர் மெட்ராஸ் உள்பட பல திரைப்படங்களை இயக்கினார் 
 
இவர் இயக்கிய சந்திரமுகி திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் என்றதும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் பி வாசு அவர்களுக்கு நமது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.