திங்கள், 20 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Updated : திங்கள், 13 செப்டம்பர் 2021 (11:23 IST)

அண்ணா பிறந்தநாளில் 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை!

தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடரின் இறுதி நாளான இன்று சில முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட பல்வேறு அறிவிப்புகளில் முக்கியமான ஒன்றாக வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதை அடுத்து 700 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளார். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.