திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 23 மே 2023 (14:05 IST)

ஆயிரத்தில் ஒருவன் 2 அப்டேட் கொடுத்த ஜி வி பிரகாஷ்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் உருவாக்கிய சாகச திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன்ம். அந்த படம் ரிலீஸின் போது பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் இப்போதுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிரது. இந்நிலையில்  செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்தின்  இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக தகவல் தெரிவித்து, இதன் போஸ்டரை சில ஆண்டுகளுக்கு முன்னர் செல்வராகவன் வெளியிட்டார்.

ஆனால் அந்த திரைபடம் 2024 ஆம் ஆண்டுதான் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், இயக்குனர் செல்வராகவன் “என்னுடைய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை அப்போதே கொண்டாடி இருந்தால் தொடர்ந்து மேலும் சில பாகங்கள் உடனே வெளியாகி இருக்கும்” எனக் கூறியுள்ளார். 

இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகத்துக்கு இசையமைத்த ஜி வி பிரகாஷ் இரண்டாம் பாகம் பற்றி தற்போது பேசியுள்ளார். அதில் “ஆயிரத்தில் ஒருவன் 2 வில் தனுஷ் நடிக்கிறார்.  பெரிய பட்ஜெட்டைக் கேட்கும் திரைப்படம் அது. அது நடந்துவிட்டால் நானும் சந்தோஷப்படுவேன்.  அந்தபடத்தின் கதையை செல்வராகவனிடம் இருந்து கேட்க நான் ஆவலாக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.