திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 20 அக்டோபர் 2020 (15:50 IST)

''1 மில்லியன் ஃபாலோயர்ஸ் ’’நன்றி தெரிவித்த வாரிசு நடிகர்

சினிமாத் துறைனரின் பெரும்பாலும் தங்களுக்கென சமூக வலைதளங்களில் கணக்கு வைத்து, அதில் தங்கள் ரசிகர்களுக்கு அடுத்த படம் குறித்த அறிவிப்புகளை அப்டேட் செய்து வருகின்றனர்.

இதனால் நடிகர், நடிகைகளை ஃபாலோசெய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.,

தங்கள் ரசிகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கவும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிபதும் அவர்களின் புகைப்படம் மற்றும் அவர்களைச் சார்ந்த வீடியோக்களும் வைரலாகும்.

இந்நிலையில் நடிகர் கார்த்திக்-ன் மகனும் இளம் நடிகருமான கௌதம் கார்த்தியின் டுவிட்டர் கணக்கை 1 மில்லியன் பேர் ஃபாலோ செய்துள்ளனர். இதுகுறித்து கௌதம் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில், தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து  ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.