முத்தையா இயக்கத்தில் அடுத்து நடிக்கும் வில்லன் நடிகர் – டிவிட்டரில் அறிவிப்பு!

Last Modified திங்கள், 19 அக்டோபர் 2020 (10:31 IST)

இயக்குனர் முத்தையா இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆர் கே சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

சசிக்குமார் நடித்த குட்டிப் புலி மற்றும்
கார்த்தி நடித்த கொம்பன் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா, அவர் படங்களில் சாதியக் கருத்துகள் இடம்பெற்று வருவதாக ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்படுகிறது. ஆனாலும் தென் மாவட்டங்களில் அவர் படங்கள் நல்ல வெற்றியைப் பெறுகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் கௌதம் கார்த்தியை வைத்து இயக்கிய தேவராட்டம் திரைப்படம் சர்ச்சைகளை ஏற்படுத்தி வெற்றி பெற்றது.

இந்நிலையில் அவர் இப்போது அவர் நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் திரையரங்க வெளியீடாக இல்லாமல் சன் நெக்ஸ்ட் தளம் மற்றும் சன் டிவியில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் முத்தையா இயக்கும் அடுத்த படத்தில் நான் நடிக்க இருக்கிறேன்’ என பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் டிவிட் செய்துள்ளார். இவர் பாலாவின் தாரை தப்பட்டை, வேட்டை நாய் மற்றும் பில்லா பாண்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது பாலாவின் தயாரிப்பில் விசித்திரன் என்ற படத்தில் நடித்துள்ளார்.



இதில் மேலும் படிக்கவும் :