’’எனக்குப் பிடித்த படம் அதுதான்…..’’அவரை மிஸ் செய்கிறேன் –பிரபல நடிகை டுவீட்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தன் தமிழால் தமிழ்த் திரையுலகினைக் கட்டிஆண்டார். செவாலியே விருது பெற்ற முதல் நடிகரும் அவர்தான்.
இந்நிலையில் இன்று டுவிட்டரில் ஒரு வீடியோ கிளிப் ஒன்று வைரலானது., அதில் நடிகை ராதிகா சரத்குமாரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் பேட்டி காண்பது போல் அமைந்த நிகழ்ச்சியில், தனது தந்தை எம்.ஆர்.ராதா பற்றி அவர் கேட்க…அதற்குப் பதிலளித்த சிவாஜி, அவர் எனக்கு மூத்த சகோதரன் எனக்கு குரு மாதிரி…என்றும் அவரை என் வீட்டுகு அருகில் குடிவைத்தது நான் தான் என்றும், நான் பராசக்தியில் நடிக்கும்போது அவர் ரத்தக்கண்ணீரில் நடித்தார்… அவர் சினிமா வேணாம் நாடகம் போதும் என்று சொன்னபோது நான் தான் அவரைப் பலவந்தப்படுத்தி, சினிமா ,நாடகம் இரண்டிலும் நடிக்க வைத்தேன் என்று கூறினார். பின் நாங்கள் இருவரும் இணைந்த நடித்த படம்க் பார்த்துள்ளாயா என்று ராதிகா சரத்குமாரிடம் கேட்க, அவர் பாவ மன்னிப்பு எனக்குப் பிடிக்கும் என்று கூறினார்.
இதற்கு பதில் டுவீட் செய்த ராதிகா சரத்குமார்,. அவரை மிஸ் செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.