வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 28 ஜனவரி 2019 (21:17 IST)

கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

2018ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான விருதுக்கான நாமினேசனில் கீர்த்தி சுரேஷ் இடம்பெற்றுள்ளார்.


 
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இப்படம் நடிகையர் திலகம் என்ற பெயரில் தமிழில் வெளியானது. தெலுங்கில் மகாநதி என்ற பெயரில் வெளியானது. இதில் சமந்தா பத்திரிகையாளராக நடித்திருந்தார்.
 
தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பை இப்படத்துக்கு பல விருதுகள் கிடைத்தன. கீர்த்தி சுரேஷை நேரில் ஆந்திர முதல்வர் சந்திபாபு நாயுடு பாராட்டினார். 
2018ம் ஆண்டுக்ககான சிறந்த நடிகைக்கான 12வது  எடிசனல் (#12thAnnualEdisonAwards) விருதுக்கான நாமினேசனில்  கீர்த்தி சுரேஷ் உள்ளார்.  
நடிகையர் திலகம் படத்தில் நடித்ததுக்காக  கீர்த்தி சுரேஷ் நாமினேசன் செய்யப்பட்டுள்ளார்.
 
வாக்களிப்பவர்கள்  edisonawards.in  என்ற இணையதளத்தில் வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.