1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 24 நவம்பர் 2018 (17:40 IST)

அதுக்காகவே அவரோடு நடித்தே தீருவேன் - சபதம் ஏற்ற கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகையாக வளர்ந்து வருகிறார். இவர் நடித்த சாவித்ரி  படத்திற்கு கீர்த்திக்கென பிரமாண்ட ரசிகர்கள் கூட்டமே உருவாகிவிட்டது.
 
இந்நிலையில் மகாநடி படத்திற்காக கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ஒரு விருது வாங்கினார், அந்த விருதை பிரபல நடிகர் ஜெயம் ரவி தான் கீர்த்திக்கு தந்தார்.
 
அந்த நேரத்தில் எப்போது ஜெயம் ரவியுடன் நடிப்பீர்கள் என்று கேட்டதற்கு ‘என்னிடம் பலரும் ஏன் ரவியுடன் மட்டும் நடிக்கவே இல்லை என்று கேட்கிறார்கள்.
 
ஒரு சில படங்கள் நாங்கள் நடிப்பதாக இருந்தது ஆனால் அது சில காரணங்களால் தள்ளி சென்றது, பலரும் கேட்பதால், அதற்காகவே அவருடன் ஒரு படத்தில் நடித்தே ஆகவேண்டும்’ என்று கீர்த்தி கூறி புன்னகைத்தார்.