பொங்கல் நாளில் மூன்று கீர்த்திசுரேஷ் படங்கள்: ரசிகர்கள் மகிழ்ச்சி

keerthy
Last Modified ஞாயிறு, 13 ஜனவரி 2019 (14:56 IST)
கடந்த ஆண்டு நடிகை கீர்த்திசுரேஷூக்கு ராசியான ஆண்டாக அமைந்தது. தமிழில் அவர் நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்', 'நடிகையர் திலகம், 'சீமாராஜா,' 'சாமி 2', 'சண்டக்கோழி 2' மற்றும் சர்கார் படங்கள் கடந்த ஆண்டு வெளியானது. இவற்றில் அனைத்து படங்களும் குறிப்பாக நடிகையர் திலகம் மற்றும் சர்கார் திரைப்படங்கள் வசூல் அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது

இந்த நிலையில் வரும் பொங்கலை முன்னிட்டு கீர்த்திசுரேஷ் நடித்த மூன்று திரைப்படங்கள் தொலைக்காட்சியில் திரையிடப்படவுள்ளது. வரும் திங்கள் காலை 11 மணிக்கு விஜய் டிவியில் 'சாமி 2' திரைப்படமும், மாலை 4.30 மணிக்கு ஜீடிவியில் 'நடிகையர் திலகம்' படமும் மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் 'சண்டக்கோழி 2' திரைப்படமும் திரையிடப்படவுள்ளது. ஒரே நாளில் மூன்று கீர்த்திசுரேஷ் படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவிருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


ஆனால் அதே நேரத்தில் கீர்த்திசுரேஷுக்கு இந்த வருடம் இன்னும் எந்த தமிழ்ப்படமும் புக் ஆகவில்லை. அவருக்கு தற்போது கைவசம் ஒரே ஒரு மலையாள படம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :