ஆஸ்கருக்கு அனுப்பும் முயற்சியில் ஆடு ஜீவிதம் படக்குழு!
மலையாள சினிமாவில் சமீப காலமாக அற்புதமாக திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.
சமீபத்தில் வெளியான மஞ்சுமல்பாய்ஸ் திரைப்படம் ரூ.200 கோடி வசூலித்து, சாதனை படைத்தது. மொழியைக் கடந்து, ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையடுத்து கடந்த 28 ஆம் தேதி வெளியான ஆடுஜீவிதம் படம் எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நடிகர் பிரித்விராஜ் நடிப்பில், பிளஸ்சி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இப்படம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் வெளியான முதல் நாளில் ரூ.7.60 கோடிக்கும் மேலாக வசூல் குவித்து, மலையாள சினிமாவில் மிகப்பெரிய ஓபனிங் பெற்ற படமாக அமைந்தது.
இந்த நிலையில், இப்படம் 9 நாள்களில் ரூ.100 கோடி வசூலை ஈட்டியுள்ளது.
மஞ்சுமல் பாய்ஸ் ரூ.212 கோடி வசூலித்து சாதனை படைத்த நிலையில், இதை ஆடுஜீவிதம் பட வசூல் முறியடிக்குமா? என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.