ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 13 மார்ச் 2024 (08:06 IST)

பிரேமலு தமிழ் டப்பிங்கை வெளியிடும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்!

கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் அங்கு வெளியான பிரேமலு, ப்ரமயுகம் மற்றும் மஞ்சும்மள் பாய்ஸ் ஆகிய மூன்று திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. இதில் மிகச்சிறிய பட்ஜெட்டில் முழுக்க முழுக்க இளம் நடிகர்களை வைத்து உருவான பிரேமலு திரைப்படம் தற்போது வரை 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலை அள்ளியுள்ளது. இதைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பெரிய நடிகர்கள் யாரும் இல்லாமல் வளர்ந்து வரும் நடிகர்களான நஸ்லின் மற்றும் மமிதா பைஜு ஆகியோரை வைத்து ஒரு அழகான பீல்குட் கதையாக இந்த படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் மமிதா பைஜு. இதில் கேரளா தாண்டியும் உள்ள மலையாள ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. தமிழகத்தில் இந்த படத்தின் மலையாள வெர்ஷனே மிகப்பெரிய அளவில் வசூலித்தது.

இதையடுத்து பிரேமலு படத்தின் தமிழ் டப்பிங் மார்ச் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.