கௌதம் மேனன் இயக்கும் ஜெயலலிதா பயோபிக் – சில மாற்றங்கள் !
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அவரது வாழ்க்கை வரலாற்றைப் பலர் படமாக எடுக்க கௌதம் மேனன் அதை வெப் சீரிஸாக எடுத்து வருகிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் ஏ எல் விஜய் தலைவி என்ற பெயரிலும் பிரியதர்ஷினி தெ அயர்ன் லேடி என்ற பெயரிலும் படமாக எடுக்க முயன்று கொண்டிருக்கின்றனர். இரண்டு படங்களிலும் முறையே கங்கனா ரனாவத் மற்றும் நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடிக்க இருக்கின்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்வை மையமாக வைத்து கௌதம் மேனன் பிரசாத் முருகேசன் என்பவருடன் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கும் முனைப்பில் உள்ளார். அதில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார் என சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த வெப் சீரிஸ் ஜெயலலிதாவின் நேரடி பயோபிக்காக இல்லாமல் அவரது வாழ்வை மையப்படுத்திய புனைவாக உருவாக இருக்கிறதாம். இதில் ரம்யா கிருஷ்ணன் சக்தி என்ற பெயரில் நடிக்க இருக்கிறார். இந்த வெப் சீரிஸூக்கு குயின் எனப் பெயரிடப்பட்டுள்ளது.