இளையராஜாவின் ஒரு பாடலை சுற்றி கதை… கவுதம் மேனன் பகிர்ந்த ரகசியம்!
தான் இயக்கியுள்ள நவரசா ஆந்தாலஜியின் குறும்படம் இளையராஜாவின் ஒரு பாடலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.
அமேசான் ப்ரைம் தளத்துக்காக மணிரத்னம் ஆந்தாலஜி தொடரை உருவாக்கி வருகிறார். நவரசா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் 9 கதைகள் காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.
இந்த கதைகளில் ஒன்றில் நடிகர் சூர்யா நடிக்க, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி வருகிறார். அந்த பகுதிகளின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக பி சி ஸ்ரீராம் பணியாற்றியுள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிசாசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த பிரயாகா மார்ட்டின் நடித்துள்ளார்.
இந்த படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் கௌதம் மேனன் இந்த படத்தில் அளவுக்கதிகமாக பேசப்படும் சமூகப் பொறுப்பு குறித்து கேலியான கதையை உருவாக்கியுள்ளேன். இளையராஜாவின் ஒரு பாடலை சுற்றிதான் படத்தின் கதை இருக்கும். அதற்காக அந்த பாடலைப் பயன்படுத்திக் கொள்ள அவர் அனுமதி அளித்தார். எனக் கூறியுள்ளார்.