1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 24 பிப்ரவரி 2024 (08:10 IST)

விஜய்யின் கடைசி படத்தை இயக்குவீர்களா… இயக்குனர் கௌதம் மேனன் அளித்த பதில்!

விஜய் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு ’யோகன் அத்தியாயம் ஒன்று’ என்ற திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இதனையடுத்து 8 ஆண்டுகளுக்குப் பின்னர் இதே கதையை வருண்என்ற அறிமுக நடிகரின் நடிப்பில் ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ என்ற பெயரில் கௌதம் மேனன் சில ஆண்டுகளுக்கு முன்பே இயக்கி முடித்தார். ஆனால் படம் சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடந்தது.

இதையடுத்து மார்ச் 1 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகிறது. இதையடுத்து படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி கவனம் பெற்றுள்ளது. இதையடுத்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் கௌதம் மேனன் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் விஜய்யின் கடைசி படத்தை இயக்குவீர்களா எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘நான் தயாராக இருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

மேலும் ஜோஷ்வா பற்றி பேசிய அவர் “இது ஒருவகையில் பரிட்சார்த்தமான படம். இது என்னுடைய 19 ஆவது படம். துருவ நட்சத்திரம் வந்தால் அது என்னுடய 20 ஆவது படமாக இருக்கும். கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இந்த படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.” எனக் கூறியுள்ளது.