திங்கள், 15 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (18:24 IST)

விஜய் அரசியலுக்கு வந்தது சரியா? இயக்குனர் கவுதம் மேனன் பதில்!

LEo Vijay
விஜயின் அரசியல் வருகை பற்றி கவுதம் மேனனிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பிதற்கு, 'விஜய் இன்னும் நிறைய படங்களில் நடித்தால் நன்றாக இருக்கும்' என்று  அவர் பதிலளித்துள்ளார்.
 
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் கவுதம் மேனன். இவர் தற்போது இயக்கியுள்ள படம் ஜோஷ்வா இமைபோல் காக்க' இப்படத்தில்  பிக்பாஸ் புகழ் ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோயினாக ராக்கே நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து, யோகிபாபு, டிடி, கிருஷ்ணா, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பல  நடித்துள்ளனர்.
 
இந்த நிலையில், ஜோஷ்வா இமைபோல் காக்க படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது.
இப்படம் பற்றிக் கூறிய கவுதம் மேனன் வரும் மார்ச் 1 ஆம் தேதி  இப்படம் வெளியாகவுள்ளது என்று கூறினார்.
 
அப்போது., விஜயின் அரசியல் வருகை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்,  விஜய் இன்னும் நிறைய படங்களில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.
 
மேலும், விஜய்யின் கடைசிப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் இயக்குவீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், வாய்ப்பு கிடைக்குமா எனத் தெரியவில்லை. ஒருவேளை கிடைத்தால் இயக்குவேன் என்று கூறினார்.