செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (18:20 IST)

'ருத்ரதாண்டவம் படத்தின் வில்லனாக பிரபல இயக்குனர்!

இயக்குனர் ஜி மோகன் இயக்கிய திரௌபதி திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் ருத்ரதாண்டவம் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது 
 
திரௌபதி படத்தின் ஹீரோ ரிச்சர்ட் நடிக்கும் இந்த படத்தின் நாயகியாக குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது என்பதும் இந்த படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தில் வில்லனாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது/ ஏற்கனவே சில படங்களில் கவுதம் மேனன் நடித்து வந்த நிலையில் தற்போது வில்லனாகவும் மிரட்ட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது