வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (11:46 IST)

டபுள் அப்டேட்டை வெளியிடும் திரௌபதி இயக்குனர்!

இயக்குனர் மோகன் ஜி இயக்கிய திரௌபதி படம் கடந்த ஆண்டு ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இப்போது ருத்ர தாண்டவம் என்ற படத்தை அவர் இயக்கி வருகிறார்.

தனது முதலாவது படத்திலேயே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியவர் இயக்குனர் மோகன் ஜி. நாடக காதல் அதன் பின்னால் இயங்கும் கும்பல் என்ற கருவை வைத்து இவர் இயக்கிய “திரௌபதி” படம் சர்ச்சைகளையும், பாராட்டுகளையும் பெற்றது. இந்நிலையில் மோகன் ஜி தனது இரண்டாவது படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த படம் சாதிய மேலாதிக்கம் பேசுவதாக விமர்சனங்கள் எழுந்தன.

”ருத்ர தாண்டவம்” என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் போஸ்டரில் மீடியா கேமராக்கள், துப்பாக்கி, போதைப்பொருள், ஜெபமாலை போன்றவை இடம்பெற்றுள்ளன. இந்த படம் தமிழகத்தில் ரகசியமாக செயல்படும் போதை மாஃபியாக்களை பற்றியதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. திரௌபதி படத்தில் நடித்த ரிஷி ரிச்சர்டே இந்த படத்திலும் நடிக்கிறார். 2021 மே மாதத்தில் இந்த படம் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி நடந்து வந்தது.

இந்நிலையில் காதலர் தினத்தில் இந்த படம் குறித்த இரண்டு அப்டேட்களை வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.