1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (14:39 IST)

10 நிமிடத்திலேயே Spark பாடலை எழுதிமுடித்துவிட்டேன்… கங்கை அமரன் பகிர்ந்த தகவல்!

விஜய் நடித்துள்ள கோட் (the greatest of all time) திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் நேற்று மூன்றாவது பாடலான Spark பாடல் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி மற்ற பாடல்கலைப் போலவே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த பாடலை கங்கை அமரன் எழுத யுவன் ஷங்கர் ராஜா மற்றும் விருஷா பாலா ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்த பாடல் குறித்து சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் பேசியுள்ள கங்கை அமரன் “இந்த பாடலை பல மாதங்களுக்கு முன்பே நான் எழுதிவிட்டேன். அப்போது எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. ஆனாலும் ட்யூனைக் கொடுத்ததும் பத்தே நிமிடத்தில் பாடல் வரிகளை எழுதிவிட்டேன். இந்த பாடலைக் கேட்டதும் தம்பி விஜய் பாடல் நன்றாக உள்ளதாக பாராட்டினாராம். இப்போது ரசிகர்களும் அந்த பாடலைக் கேட்டு ரசிப்பது மகிழ்ச்சி. நான் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதி இருந்தாலும் விஜய்க்காக நான் எழுதிய முதல் பாடல் இதுதான்” எனக் கூறியுள்ளார்.