செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 3 ஆகஸ்ட் 2024 (14:27 IST)

கோட் படத்துக்கு ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி இல்லையா… ரசிகர்களுக்கு சோக செய்தி!

தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 3ஆம் தேதி மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இதுவரை மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டு விட்டன. மேலும் படத்தில் உள்ள மற்ற பாடல்களும் இதுபோல தனித்தனியாக வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது. அதனால் கோட் படத்துக்கு ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி இருக்காது என சொல்லப்படுகிறது. வழக்கமாக விஜய் தனது படங்களின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிகளில் பேசுவது மிகுந்த சலசலப்பை உண்டாக்கும். இப்போது அரசியல் கட்சியும் ஆரம்பித்துள்ளதால் கோட் படத்தின் ஆடியோ வெளியீட்டை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.