1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 24 ஜனவரி 2020 (09:12 IST)

திரெளபதி படத்துடன் அஜித் சம்பந்தப்படுத்தப்பட்ட விவகாரம்: இயக்குனர் வெளியிட்ட அதிரடி வீடியோ!

இயக்குனர் ஜி மோகன் இயக்கிய திரெளபதி படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படம் நாடகக் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த படத்திற்கு தல அஜித் ஆதரவு கொடுத்ததாக ஒரு வதந்தியை ஒரு சிலர் பரப்பி விட்டனர்
 
இந்த வதந்திக்கு ஏற்கனவே இயக்குனர் ஜி மோகன் விளக்கம் அளித்து விட்ட நிலையிலும் இந்த வதந்தி தற்போது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் முன்னணி ஊடகம் ஒன்றில் தல அஜித்தை திரெளபதி படத்துடன் சம்பந்தப்படுத்தி ஒரு கட்டுரை வெளியாகி உள்ளதாக தெரிகிறது. இந்த கட்டுரைக்கு இயக்குனர் மோகன் அவர்கள் பதிலளிக்கும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டு கூறியிருப்பதாவது:
 
இந்த வார ஊடகம் ஒன்றில் திரெளபதி பற்றி கட்டுரை எழுதி, சம்மந்தமில்லாத மனிதரை சம்மந்தப்படுத்திய அந்த நபர்களுக்கு நானும் என் மகளும் தரும் அன்பு பரிசு இதான்.. என்றும் தல என் மரியாதைக்குரியவர் என்று தெரிவித்துள்ளார். இந்த டுவீட்டும் வீடியோவும் வைரலாகி வருகிறது