ரஜினிகாந்த் ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும்? திரௌபதி இயக்குனர் கேள்வி
நடந்த உண்மையை தைரியமாக கூறிய ரஜினிகாந்த் ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும்? என திரெளபதி படத்தின் இயக்குனர் ஜி மோகன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ரஜினிகாந்த் பேசியதாகவும் அதனால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் திக, திமுக உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்
ஆனால் தான் நடந்ததைத்தான் பேசியதாகவும் பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் தான் பேசியதாகவும் அதனால் வருத்தம் தெரிவிக்கவோ, மன்னிப்பு தெரிவிக்கவோ முடியாது என்று ரஜினிகாந்த் நேற்று பேட்டியளித்தார்
இந்த நிலையில் நடந்த உண்மையை வெளியே தைரியமாக பேசினால் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்று ரஜினிகாந்த் விவகாரம் குறித்து திரைப்பட இயக்குனர் மோகன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மோகனின் இந்த டுவீட்டுக்கு ஆதரவு, எதிர்ப்பு கருத்துக்கள் சம அளவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது