'தல' அஜித்துடன் இணைந்து நடிக்க முடியவில்லை : பிரபல நடிகர் வருத்தம் !
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான அஜித்துடன் தன்னால் இணைந்து நடிக்க முடியவில்லை என பிரபல நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தை தயாரிப்பவர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனம் கபூர் இப்படத்தை தயாரித்து இருந்தார்.
இவர்களின் கூட்டணியில் இரண்டாவது படம் வலிமை என்ற பெயரில் உருவாகிவருகிறது. இது அஜித்திற்கு 60 வது படம் ஆகும்.
இந்நிலையில், நடிகர் அஜித்துடன் யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரத்தை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் பிரசன்னா வில்லனாக நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. இப்படியிருக்க, பிரசன்னா தனது டுவிட்டர் பக்கத்தில், ’தல அஜித்துடன் நடிக்க ஆவலுடன் இருந்தேன். ஆனால் எதிர்பாராத விதத்தில் அது முடியவில்லை; அடுத்த வாய்ப்பு கிடைத்தால் அதில் நிச்சயம் நடிப்பேன்’ என தெரிவித்துள்ளார். இவரது டுவீட்டுக்கு பலரும் லைக்குகள் போட்டுள்ளனர்.