வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 19 அக்டோபர் 2019 (08:48 IST)

தல அஜித்தின் ’வலிமை’ சூட்டிங் எப்போ? ரிலீஸ் டேட் என்ன?

நடிகர் அஜித்குமாரின் 60வது படமான வலிமையின் சூட்டிங் மற்றும் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 
 
நடிகர் அஜித்குமார் நடிக்கும் 60வது படத்தின் பூஜை நேற்று  சென்னையில் நடைபெற்றது. இந்த படத்திற்கு ’வலிமை’ என பெயரிடப்பட்டுள்ளது. வழக்கமாக படத்தின் டைட்டில் பூஜையின் போதே சொல்லமாட்டார்கள். ஆனால், டிரெண்டை மாற்றும் விதமாக பூஜையின் போதே தலைப்பும் வெளியிடப்பட்டுள்ளது. 
 
போனி கபூர் தயாரிக்க இருக்கும் இந்த படத்தை எச்.வினோத் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதை தவிர்த்து படம் குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. விரைவில் படத்தின் மற்ற கதாபாத்திரங்களின் தேர்வு குறித்து தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
இந்நிலையில், படத்தின் ஷூட்டிங் மற்றும் ரிலீஸ் எப்போது இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தின் படபிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கும் என்றும் இந்தபடம் 2020 கோடை விடுமுறைக்கு வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.