வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 21 மார்ச் 2019 (10:31 IST)

கறி விருந்துக்கு அழைத்த விஜய் டிவி பிரபலம்: என்ன விசேஷம்?

தனது குழந்தையின் பிறந்தநாளில் கலந்துகொள்ளும் படி செந்தில் கணேஷ் ஃபேஸ்புக்கில் அழைப்பு விடுத்துள்ளார்.
 
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வின்னரான செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி ஏற்கனவே செம ஃபேமஸ் ஆகியிருந்தாலும் கூட   'சின்ன மச்சான் செவத்த மச்சான்' பாடல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் ஆகினர். செந்தில் கணேஷ் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
 
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர்.
 
இந்நிலையில் அவர்களின் 3வது குழந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு தனது பேஸ்புக் பக்கத்தில் எனது மூன்றாவது தாய்க்கு இராண்டவது பிறந்த நாள். என் தாய் கிராமமான களபத்தில் தான் விழா கறிவிருந்தோடு. அனைவரும் வருக.... என பதிவிட்டார். இதைபார்த்த அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டனர்.