புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 25 பிப்ரவரி 2019 (14:31 IST)

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பாலா பட பிரபலம் ! யாருன்னு பாருங்க!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் எஸ்.கே.15 படத்தில் பாலாவின் நாச்சியார் படத்தில் நடித்து புகழ்பெற்ற இவானா நடிப்பதாக அதிகாரபூர்வ தகவல் கிடைத்துள்ளது.


 
மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தினை இரும்புத்திரை படத்தின் இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்குகிறார். 24 ஏ.எம்  ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் சி வில்லியம்ஸ் மற்றும் எடிட்டராக ரூபன் ஒப்பந்தமாகியுள்ளனர்.
 
சிவகார்த்திகேயனுக்கு  ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கும் இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன்  ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். 
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், விசித்திர படைப்புகளுக்கு பெயர்போன இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்து வெற்றிநடைபோட்ட "நாச்சியார்" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான  நடிகை இவானா இப்படத்தில்  ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த அறிவிப்பை இவானாவின் பிறந்தநாளான இன்று எஸ்.கே 15 படக்குழு அறிவித்துள்ளனர். வருகிற மார்ச் மாதம் முதல் வாரத்தில்  இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.