செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 30 ஆகஸ்ட் 2017 (22:59 IST)

மணிரத்னம் கொடுத்த அதிர்ச்சியிலும் மயங்காத விஜய்சேதுபதி

கோலிவுட் திரையுலகில் இன்றைய நிலைமையில் மாதம் ஒரு படம் ரிலீஸ் செய்யும் நிலைமையில் உள்ள ஒரே நடிகர் விஜய்சேதுபதிதான். விக்ரம் வேதா படத்தை அடுத்து புரியாத புதிர், கருப்பன், என தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு படம் வெளியாக தயார் நிலையில் உள்ளது.



 
 
இந்த நிலையில் திரையுலகில் உள்ள ஒவ்வொருவரின் கனவு மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதுதான். அந்த கனவும் விஜய்சேதுபதிக்கு நனவாகியது. ஆம், மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் விஜய்சேதுபதிதான் முக்கிய வேடம்
 
இந்த நிலையில் விஜய்சேதுபதிக்கு மணிரத்னம் ஒரு அதிர்ச்சியை கொடுத்தாராம். இந்த படத்தில் விஜய்சேதுபதியை தவிர மேலும் மூன்று நாயகர்கள் என்று கூறி அவர்களுடைய பெயரையும் கூறினாராம். அவர்கள் பெயரை கேட்டதும் கொஞ்சம் கூட தயங்காத, மயங்காத விஜய்சேதுபதி என்னுடைய கேரக்டர் எனக்கு பிடித்திருக்கின்றது. யார் நடித்தாலும் பரவாயில்லை, நான் நடிக்கின்றேன்' என்று கூலாக கூறினாராம். இந்த பதில் மணிரத்னத்திற்கே ஆச்சரியம் என்றால் பார்த்து கொள்ளுங்கள்