ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : புதன், 14 மார்ச் 2018 (18:29 IST)

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைப் பற்றி பாலிவுட் படம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைப் பற்றி பாலிவுட்டில் ஒரு படம் எடுக்கப்படுகிறது.

 
மன்மோகன் சிங், 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரை இந்தியாவின் பிரதமராக இருந்தவர். இவருடைய ஊடக ஆலோசகராக இருந்தவர் சஞ்சய் பாரு. ‘தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தை இவர் எழுதியிருக்கிறார். மன்மோகன் சிங்கைப் பற்றி எழுதப்பட்ட இந்த புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஹிந்திப் படம் உருவாகிறது.
 
விஜய் ரத்னாகர் கட்டே இயக்கும் இந்தப் படத்துக்கு, ஹன்சல் மேத்தா திரைக்கதை எழுதியுள்ளார். அனுபம் கெர் நடிக்கும் இந்தப் படத்தில், அக்‌ஷய் கண்ணா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மார்ச் 31ஆம் தேதி முதல் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. போஹ்ரா சகோதரர்கள் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.