செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : சனி, 17 பிப்ரவரி 2018 (16:38 IST)

பாலிவுட்டில் அறிமுகமாகும் யாஞ்சி புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

‘விக்ரம் வேதா’ புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத், பாலிவுட்டில் முதன்முறையாக அறிமுகமாக இருக்கிறார்.

 
மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதன்பிறகு ‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார். பின்னர், நிவின் பாலி நடித்த ‘ரிச்சி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
 
தற்போது ‘மிலன் டாக்கீஸ்’ என்ற ஹிந்திப் படத்தில் நடிக்கிறார். இதுதான் பாலிவுட்டில் அவர் நடிக்கும் முதல் படம். திக்மன்ஷு துலியா இயக்கும் இந்தப் படத்தில், அலி பஸல் ஹீரோவாக நடிக்கிறார். உத்தரப் பிரதேசத்தில் நிகழ்வதாக கதை அமைக்கப்பட்டுள்ளது.